Browse By

Premalatha takes DMDK party into the dig says Chandra kumar

பிரேமலதாவால் தேமுதிக அழிவுப்பாதைக்கு சென்றுள்ளது: சந்திரகுமார் பகிரங்க குற்றச்சாட்டு.

Tamil_News_large_1495657

சென்னை : தேமுதிக.,வில் இருந்து நீக்கப்பட்ட அதிருப்தியாளர்களுக்கு எதிராக தேமுதிக எம்.எல்.ஏ.,க்களும், கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை ஏற்க முடியாது என அதிருப்தியாளர்களும் பரபரப்பாக பேட்டி அளித்து வருகின்றனர். இந்நிலையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சந்திரகுமார், பிரேமலதாவால் தேமுதிக அழிவு பாதைக்கு சென்று கொண்டு இருப்பதாக பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.
சந்திரகுமார் உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகள் 10 பேர் நீக்கப்பட்டது தொடர்பாக தேமுதிக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் எம்.எல்.ஏ., பார்த்தசாரதி, தேமுதிக.,வை யாராலும் அழிக்க முடியாது. அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள். விஜயகாந்த் முதல்வராவதை யாராலும் தடுக்க முடியாது. தேமுதிக.,வை உடைக்க ஒரு இயக்கம் செயல்பட்டு வருகிறது. கட்சி பதவியை பயன்படுத்தி பணம் சம்பாதித்து விட்டு இன்று வெளியில் போவதற்காக குற்றம்சாட்டுகின்றனர். கூட்டணிக்கு முன் அனைவரிடமும் தலைவர் கருத்து கேட்டார். தலைவர் முடிவே இதில் இறுதியானது. கட்சியில் இருந்து விலகி சென்றவர்களுக்கு அவர்கள் செல்லும் கட்சியில் வட்ட செயலாளர் பதவி கூட கிடைக்காது என்றார். சந்திரகுமார் துரோகி என கட்சி நிர்வாகிகள் பலரும் தெரிவித்தனர்.

 

பார்த்தசாரதி பேட்டி அளித்த சிறிது நேரத்தில் மயிலாப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த சந்திரகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள், எங்களது உணர்வுகளை விரிவாக செய்தியாக்கிய ஊடகங்களுக்கு நன்றி. கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவை ஆலோசிக்காமல், ஒரு நோட்டீஸ் கூட அனுப்பாமல் எங்களை கட்சியில் இருந்து நீக்கியது செல்லாது. எங்களை கட்சியில் இருந்து நீக்கியதற்காக போட்டி தேமுதிக துவக்கும் எண்ணம் இல்லை. தேமுதிக.,வினரின் கருத்தை தெரிவித்ததற்காக எங்களை நீக்கி உள்ளனர். பணத்திற்காக விலை போக வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. தேமுதிக-மக்கள் நல கூட்டணி அமைந்ததற்கு பிரேமலதா தான் காரணம். கட்சி அவரது கட்டுப்பாட்டுக்குள் சென்று விட்டதால் தேமுதிக அழிவுப்பாதைக்கு செல்கிறது. எங்கள் கட்சியின் உட்கட்சி பிரச்னையில் தலையிடுவதற்கு வைகோ.,வுக்கு அருகதை இல்லை..

திமுக முக்கிய நிர்வாகியை விஜயகாந்த் அவரது வீட்டிற்கே சென்று சந்தித்தது உண்மை. விஜயகாந்த் சந்திப்பிற்கு பிறகே பழம் கனிந்து வருகிறது என கருணாநிதி கூறினார்.விஜயகாந்த் மீது இன்னும் எங்களுக்கு நம்பிக்கை உண்டு. கட்சி நிர்வாகிகளை திரட்டி ஓரிரு நாளில் சென்னையில் சந்தித்து முடிவெடுக்க உள்ளோம். தேமுதிக.,வில் கருத்து சுதந்திரம் இல்லை. அதிமுக.,வை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வரவே மக்கள் நல கூட்டணி முயற்சித்து வருகிறது. பிரேமலதா கட்சி செயல்பாட்டில் தலையிடாமல் இருந்தாலே கட்சி நன்றாக இருக்கும். விஜயகாந்த்தை இயக்குவதே பிரேமலதா தான். பா.ஜ., உடன் கூட்டணி வைக்கவே பிரேமலதா விரும்பினார். ஆனால் இவர்களின் ஓரிரு கோரிக்கைகளை அவர்கள் ஏற்காததாலேயே மக்கள் நல கூட்டணி பக்கம் இவர்கள் சென்றனர்.

04april-Campaig_05_1827704g

திமுக விஜயகாந்த்திற்கு பணம் கொடுத்ததாக கூறப்படும் தகவல் தவறானது. திமுக.,வுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. தேமுதிக மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்பதே என் எண்ணம். ஓரிரு நாட்களில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் . இவ்வாறு அவர் கூறினார்…

 

Read more: VAIKO APOLOGIES TO DMK CHIEF MR.M.KARUNANIDHI. 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *