Is Theri vijay comes up with 3 getup roles
ஏப்ரல் 14 விஜய்யின் தெறி படம் திரைக்கு வருகிறது. யு சான்றிதழ் பெற்றுள்ள இந்தப் படத்தில் விஜய் 3 கெட்டப்புகளில் வருகிறார்.
குடுமி, தாடி என்று இந்த ஒவ்வொரு கெட்டப்பும் மாறுபடுகிறது.
பொதுவாக இதுபோன்ற கெட்டப்புகளின் பொறுப்பை ஒப்பனை கலைஞர்கள் ஏற்றுக் கொள்வார்கள். தெறியில் காஸ்ட்யூம் டிஸைனர் கோமல் ஷஹானி கவனித்துள்ளார்.
விஜய்யின் கெட்டப்புகளுக்கேற்ற உடைகள், கூலிங்கிளாஸ் என்று அனைத்தையும் வெளிநாடுகளிலிருந்து தருவித்திருக்கிறார்கள். அனைத்துமே உலகின் முன்னணி நிறுவனங்களிலிருந்து வாங்கப்பட்டுள்ளன.
தெறியில் விஜய்யின் மூன்று கெட்டப்புகளும், அவரது உடைகளும், கூலிங்கிளாஸ்களும் ட்ரெண்ட் செட்டராக அமையும் என்று கோமல் ஷஹானி கூறியுள்ளார்.