Vijay 60: After Rajnikanth, Jagapathi babu’s Combo with Vijay.
லிங்கா படத்தில் ரஜினியுடன் மோதிய தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு, விஜய் 60 படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் 60வது படம் விரைவில் தயாராக உள்ளது. இப்படத்தில் நடிக்கும் நடிகையர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகின்றனர்.
‘தெறி’ படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்க இருக்கும் படத்தை இயக்கும் பரதன், ஏற்கனவே ‘கில்லி’, ‘வீரம்’ ஆகிய படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார். மேலும், விஜய் நடிப்பில் ‘அழகிய தமிழ் மகன்’ படத்தையும் இயக்கி இருக்கிறார்.
விஜய்யின் 60வது படத்தின் படப்பிடிப்பை மே முதல் வாரம் முதல் தொடங்க படக்குழு திட்டமிட்டிருக்கிறது. இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் எடிட்டராக ப்ரவீன், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன், விஜய்யுடன் நடிக்கும் காமெடியனாக சதீஷ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். நாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
தற்போது இப்படத்தின் வில்லனாக ஒப்பந்தமாகி இருக்கிறார் ஜெகபதி பாபு. ரஜினி நடிப்பில் வெளியான ‘லிங்கா’ படத்திற்கு பிறகு இப்படத்திற்கு ஒப்பந்தமாகி இருக்கிறார் ஜெகபதி பாபு.
தெலுங்கில் முன்னணி ஹீரோவாக நடித்து வந்தவர் ஜெகபதி பாபு. இப்போது தெலுங்கு படங்களில் ஹீரோக்களின் அப்பாவாக நடித்து வருகிறார். ரஜினியுடன் லிங்கா படத்தில் நடித்த போதே அஜீத் படத்தில் நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் விஜய் படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் வசூலை அள்ளலாம் என்பதற்காகவே பெரும்பாலும் தெலுங்கு நடிகர்களை தமிழ் படங்களில் நடிக்க வைக்கும் போக்கு அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.